சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை அரசாங்கத்துக்கு உள்ளது – தினேஸ்
In இலங்கை February 21, 2021 10:17 am GMT 0 Comments 1207 by : Dhackshala

சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா உலகப் பரவல் தொற்று காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக ஜெனீவா கூட்டத்தொடர் இணையதளம் ஊடாக இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு சில மேற்குலக நாடுகளும் சில அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அவற்றிற்கு தெரியாத யதார்த்தங்களையும் காரணிகளையும் முன்வைப்பதற்கு இலங்கை அரசிற்கும் இயலுமாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.