சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!
In இலங்கை October 15, 2018 3:48 pm GMT 0 Comments 1379 by : Ravivarman
வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் கரைச்சி பிரதேச செயலகம் வரை சென்று விழிப்புலனற்றோருக்கான நூலக வசதியினை ஏற்படுத்தித் தருமாறு கோரி பிரதேசசபை தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த நடைப்பயணம் கரைச்சி பிரதேச செயலகம் வரை சென்று தமக்கான ஓய்வு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக காணி ஒன்றை பெற்றுத் தருமாறு கோரி கரைச்சி உதவிப் பிரதேச செயலாளரிடம் மற்றுமொரு மகஜர் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்று அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.