சலிஸ்பரி தாக்குதல் சந்தேகநபர் குறித்த புதிய தகவல்!- புட்டினின் கூற்று பொய்யானது
In இங்கிலாந்து September 27, 2018 6:29 am GMT 0 Comments 1682 by : Risha

சலிஸ்பரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நொவிசொக் நச்சுத் திரவத் தாக்குதல் சந்தேகநபரான ரஷ்ய பிரஜை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பாராட்டு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலிங்கட் என்ற புலனாய்வு இணையத்தளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த நபர் ஒரு உளவுத்துறை அதிகாரி எனவும், அவர் கேர்னல் அனடோலி செப்பிகா என்ற பெயரில் பணியாற்றிவந்ததாகவும் குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியொருவரை இலக்குவைத்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற நச்சுத் திரவத் தாக்குதல் சந்தேகநபர்களின் பெயர் விபரங்களை பிரித்தானிய புலனாய்வு அதிகாரிகள் அண்மையில் வெளியிட்டிருந்தனர்.
அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான ருஸ்லான் பொஷிரோவ் என்பவர் சாதாரண குடிமகன் எனவும், அவர் ஒரு சுற்றுலா பயணியாகவே சல்ஸ்பரிக்கு விஜயம் செய்திருந்ததாகவும் ரஷ்ய ஜனாதிபதி ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.