சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள இந்திய படையினர் தயார் நிலையில் உள்ளனர் – பிபின் ராவத்
In இந்தியா December 15, 2020 5:01 am GMT 0 Comments 1399 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள இந்திய படையினர் தயார் நிலையில், உள்ளதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீனப் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து நம் முப்படைகளும் வடக்கு எல்லையில் அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
நம் படைகளின் போர்க்குணமிக்க தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க இப்போது நேரம் வந்துவிட்டது. வடக்கு எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் மற்றும் சவா லான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக உள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுபவர்கள் தான் தங்கள் நிலை குறித்து கவலை கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிபின் ராவத்தின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.