News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
  • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவுக்கு திரைப்பட நகருக்குள் நுழைய தடை
  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. சவாலை ஏற்க ஒருபோதும் அஞ்சேன்!– சஜித் பிரேமதாச

சவாலை ஏற்க ஒருபோதும் அஞ்சேன்!– சஜித் பிரேமதாச

In இலங்கை     November 7, 2018 2:41 pm GMT     0 Comments     1378     by : Arun Arokianathan

போட்டிமிகு இந்த அரசியல் நிலைமையை அனைவரும் அவதானித்துக்கொண்டுள்ளனர். நாட்டின் நிர்வாகிகள் செயற்படும் விதத்தினை சிறுவர்களும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சவாலைப் பொறுப்பேற்க தாம் எச்சந்தர்ப்பத்திலும் அஞ்சப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(புதன்கிழமை) அலரிமாளிகையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஜனபலய மக்கள் பேரணியின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையில், சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

கூட்டணியாக, இணக்கப்பாட்டின் அடிப்படையில் நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அவ்வாறு நல்லாட்சியை நடைமுறைப்படுத்தியபோது, ஜனாதிபதியையும் பிரதமரையும் இணைத்துக்கொண்டு சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அரசாங்கத்தை முன்னெடுப்பதே 24 மணித்தியாலமும் 365 நாட்களும் எனது குறிக்கோளாக இருந்தது.

பிரச்சினைகள் ஏற்பட்ட சந்தர்ப்பதிலும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு தனிப்பட்ட இலாபங்களை அடைவது எனது நோக்காக இருக்கவில்லை. நான் செய்த ஒவ்வொரு செயற்பாடுகளின்போதும் ஜனாதிபதியையும் பிரதமரையும் இணைத்துக்கொண்டு நல்லாட்சி செயற்பாடுகளை முன்னெடுத்தேன். ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலேயே நான் எவ்வேளையிலும் செயற்பட்டேன்.

அரசாங்க செயற்பாடுகளைப் போன்று கட்சியின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதனை முன்னெடுக்கும் பொழுது கொள்கைகளை பின்பற்றுவது முக்கியமானது. நாட்டை நிர்வகிக்கும்பொழுது ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் செயற்படும்போது நான் பதவிகளை எதிர்ப்பார்க்கவில்லை. இரு தலைவர்களையும் இணைத்துக்கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவே எண்ணினேன். சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை. எந்த சவாலை ஏற்றுக்கொண்டாலும் நாம் எவ்வேளையிலும் கொள்கைகளை மதிக்க வேண்டும். நாம் சரியான முறையில் செயற்பட வேண்டும்.

போட்டிமிகு இந்த அரசியல் நிலைமையை அனைவரும் அவதானித்துக்கொண்டுள்ளனர். நாட்டின் நிர்வாகிகள் செயற்படும் விதத்தினை சிறுவர்களும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நான் மட்டுமல்ல கரு ஜயசூரியவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டார். ஆகவே, நான் எடுத்த தீர்மானம் சரியென்று நினைக்கின்றேன் என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு  

    கொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரொருவரி

  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்  

    நல் நிலைக்கான நடைபயணத்தின் இரண்டாவது நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் வவுனியா ஓமந்தை பாட

  • படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு  

    படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும்

  • உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!  

    உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்குரிய

  • நாடாளுமன்ற மோதல் விவகாரம்: சிவில் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணை – லக்ஷ்மன் கிரியெல்ல  

    நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பாக சிவில் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட


    பிந்திய செய்திகள்
  • கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
    கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
  • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவுக்கு திரைப்பட நகருக்குள் நுழைய தடை
    பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவுக்கு திரைப்பட நகருக்குள் நுழைய தடை
  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
    பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
    வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
    நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
    சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
  • படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
    படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
  • உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
    உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.