சஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு!

சஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வேறு எந்த வயதினரையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துவரும் நிலையில், இந்த அதிகரிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்திய வெளியான மாகாண புதுப்பித்தலின் படி, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 213 ஆகும். இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைவிட 69 சதவீதம் அதிகரித்துள்ளது.
மற்ற வயதினரிடையே தொற்றுகள் 126ஆக இருந்தன. ஒப்பிடுகையில், சுகாதார அதிகாரிகளால் அளவிடப்பட்ட நான்கு இளைய வயதினரின் வாரத்திற்கு சராசரியாக வார அதிகரிப்பு 30 சதவீதமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.