சஹரானின் சகோதரி வீட்டில் பெருந்தொகையான பணம் கண்டெடுப்பு!
In ஆசிரியர் தெரிவு May 1, 2019 12:01 pm GMT 0 Comments 6501 by : Litharsan

இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சஹரானின் சகோதரியான மொஹமட் காதின் மதனியா (வயது-25) என்பவரின் புதிய காத்தான்குடி-3 இல் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அதிகாரி எம்.எம்.பி.தீகவதுர தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.