சஹ்ரானின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது
In இலங்கை February 20, 2021 6:06 am GMT 0 Comments 1248 by : Dhackshala

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லை ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சஹ்ரானினால் பெண்கள் சிலரை பயங்கரவாத செயற்பாட்டுக்கு இணைத்துக்கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் 6 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.