சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் கனேடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவை சேர்ந்த 25 வயதான இளைஞர் தனது காதலி மற்றும் நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு இரண்டு மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டே செல்லும் சாகச விளையாட்டில் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இளைஞரின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்து விழுந்ததில் 100 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
கீழே விழுந்த இடத்தில் முழுவதும் கற்கள் இருந்த நிலையில் அதில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.