சாய்ந்தமருதில் 88 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்: அஜ்வத்

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் 88 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜ்வத் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இப்பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வளைவுகளில் தேங்கி கிடைக்கும் சிரட்டைகள், பிளாஸ்டிக், கொள்கலன்கள் மற்றும் திண்மக் கழிவுகளை அவசரமாக அகற்றும் நடவடிக்கையினை கல்முனை மாநகர சபை மூலம் முன்னெடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்நிகழ்வில் டெங்கு நுளம்பு பெருக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் 7,8ஆம் ஆகிய இரு திகதிகளில் இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கான விசேட துப்பரவு செயற்றிட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.