சாளம்பைக்குளத்தில் மேலும் மூவருக்கு கொரோனா- நீடிக்கின்றது முடக்கம்
In இலங்கை December 14, 2020 5:51 am GMT 0 Comments 1493 by : Yuganthini

வவுனியா- சாளம்பைக்குளத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கான பி.சி.ஆர்.பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி, நேற்று முன்தினம் காலை முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்று உறுதியான இருவரிடத்திலும் நெருங்கி பழகியவர்களிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் பிரகாரம் 3 பேருக்கு மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் பகுதியின் முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் அமைந்துள்ள அல்அக்சா பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.