சாவகச்சேரி நகரசபை கூட்டமைப்பின் வசம்! – தவிசாளராக சிவமங்கை
சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், சாவகச்சேரி நகரபையில் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது. நகரசபை தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவமங்கை ராமநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தவிசாளர் தெரிவுக்காக சிவமங்கை மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அ.மயூரன் ஆகியோர் போட்டியிட்டிருந் நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பபட்டது. இதில் 12 வாக்குகள் பெற்று, 6 வாக்குகள் வித்தியாசத்தில் இ.சிவமங்கை தவிசாளராக செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவுசெய்யப்பட்டார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், சாவகச்சேரி நகர சபைக்கு தமிழரசு கட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 6 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.