சினிமா பற்றிய தேடலை ஆரம்பித்துள்ளேன்: வேதிகா
In சினிமா May 3, 2019 3:44 am GMT 0 Comments 2387 by : Yuganthini

சினிமாவில் சிறந்த இடத்தை வகிக்க வேண்டுமென்ற காரணத்தினால், சினிமாதுறை பற்றிய தேடலை ஆரம்பித்துள்ளேன் என நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் காஞ்சனா- 3 படத்தில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்ற வேதிகா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சினிமா துறை பற்றி பல விடயங்களை தற்போது கற்று வருகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்தான் எனது இரண்டாவது தாய்மொழி. ரசிகர்களும் நிறைய தமிழ் படங்களையே விரும்புகின்றனரெனவும் வேதிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் புதுப்படம் ஒன்றிலும் நடித்து வருகின்றேன். அது தொடர்பான தகவல் அடுத்தவாரம் வெளியாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.