சினி துணுக்கு  

நடிகை சாந்தினியும், நடன இயக்குநரான நந்தாவும் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் டிசம்பர் 12ந் திகதி நடைபெறவிருக்கிறது.

சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து 20 படங்கள் வெளியாக இருப்பதால் அந்த படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்டது, நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.