சியோமி பேன்ட் மற்றும் கண்காணிப்புக் கமரா அறிமுகம்!
In தொழில்நுட்பம் September 27, 2018 12:39 pm GMT 0 Comments 1334 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படி சியோமி பேன்ட் மற்றும் கண்காணிப்புக் கமரா, சியோமி டிவி, ஏர் ப்யூரிஃபையர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக சியோமி பேன்ட் சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி ஏர் ப்யூரிஃபையர் சாதனம் வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் சந்தைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான கண்காணிப்புக் கமராக்களில் பயன்படுத்தப்படும் R 265 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய தரவை சேமிக்க சியோமி கமரா உதவுகிறது.
குறிப்பாக இந்த சாதனம் வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமேசான், ஃப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி மி பேன்ட் 3 சாதனம் பொறுத்தவரை 0.7-இன்ச் ஒ.எல்.இ.டி பிக்சல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அதன்பின்பு கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங் போட்டோப்லெதிஸ்மோகிராஃபி, இதய துடிப்பு சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.