சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – பொதுமக்கள் 70 பேர் உயிரிழப்பு!
In உலகம் February 12, 2019 2:21 pm GMT 0 Comments 1428 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

சிரியா டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர்.
இருப்பினும் சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி இருக்கும் குறித்த பயங்கரவாதிகள் மீது தாக்குதலை நடத்த முன்னர் பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இப்பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது அங்குள்ள தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.