சிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்கான வட்டியில் மாற்றம் இல்லை

நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதத்தை குறைத்துள்ள போதும், சிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்காக வழங்கப்படும் 15 சதவீத வட்டியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் 15 சதவீத வட்டி முறை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2015 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியின் மூலமான வருமானம் ஒரு மில்லியன் வரையில் வைத்திருக்கும் வட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் இந்த விஷேட வரி நிவாரணம் 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி வர்த்தக வங்கிகளுக்கு 1,600 கோடி ரூபாவை வழங்குவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.