சிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த
In இலங்கை October 15, 2018 7:01 am GMT 0 Comments 1697 by : Yuganthini

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் மந்தகதியில் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தற்போதைய இளைஞர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாகவும் அப்போதைய சூழ்நிலை தொடர்பாகவும் சரியாக தெரியவில்லை.
மேலும் இவர்கள் நினைக்கின்றார்கள் அக்காலத்திலிருந்தே அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கிராமங்களிலுள்ள வீதிகள் ஆகியன சிறந்த முறையில் காணப்பட்டதாகவும் அபிவிருத்தி செயற்பாடுகளும் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்ததாகவும் நினைக்கின்றார்கள்.
ஆனால், அவை உண்மை இல்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும் நாம் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது பாரிய பின்னடைவை கண்டுள்ளது.
இதற்கு காரணம் சிந்தித்து செயலாற்றக்கூடிய வினைத்திறன்மிக்க தலைமைத்துவம் தற்போதைய அரசாங்கத்தில் இல்லாதமையே இதற்கு காரணமாகும்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.