சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் !
In இலங்கை January 25, 2021 7:06 am GMT 0 Comments 1352 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 146 பேர் கைதிகள் என்றும் ஐந்து பேர் சிறைச்சாலைகள் அதிகாரிகள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளுக்குள் இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 4,396 ஆக உள்ளது.
அவர்களில் 4,234 பேர் குணமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.