சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு அறுவடை
In இலங்கை February 13, 2021 9:14 am GMT 0 Comments 1278 by : Yuganthini

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கவனிப்பாரற்ற நிலையில் திருப்பெருந்துறை பகுதியில் இருந்த மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் அறுவடை விழா, இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீவ ஜெயசேகர தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரிய நடைமுறைகளுக்கு அமைவாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலையின் நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
முதல் கட்டமாக சுமார் 18 ஏக்கர் வயல் நிலத்தில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிறந்த விளைச்சல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.