சிலரை கட்டாயப்படுத்தி கட்சித் தொடங்கச் சொல்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு
In இந்தியா December 20, 2020 7:59 am GMT 0 Comments 1467 by : Dhackshala

சட்டமன்றத் தேர்தலையொட்டிச் சிலரைக் கட்டாயப்படுத்திக் கட்சி தொடங்கச் சொல்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடந்த தி.மு.க. மா.செ. மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.ஸ
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். அர்ச்சுனன் குறி போல் தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும். அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஆளுங்கட்சியிடம் நிறைய பணம் உள்ளது. தங்களை காப்பாற்றிகொள்ள பணத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது.
பணத்தை கொடுத்தும் அ.தி.மு.க தோல்வியடைந்துள்ளது. பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனங்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும்.
10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க எதுவும் செய்யவில்லை. இந்த கோபம் மக்களிடம் உள்ளது. வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். வெற்றிக்கான சூத்திரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நம்முடைய இலக்கு 200க்கு மேல். இதில் ஒரு இஞ்ச் குறையக்கூடாது. 24 மணி நேரம் உழைத்தால்தான் நமது இலக்கை அடைய முடியும்.
விரைவில் தேர்தல் வரவுள்ளதாக தகவல் வருகிறது. இதனால், விரைவில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பேன்” என அவர் மேலும் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.