சிலியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு
சிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சகிதம் நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணித்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. தெற்கு சிலியிலுள்ள பொயெர்டோ மொன்ட் என்ற நகரிலுள்ள வீட்டின் மீது மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
லா பலோமா என்ற இடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த சில நொடிகளில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தினால் வீட்டின் கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்நிலையில், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
8 பேர் சகிதம் இந்த விமானம் பயணிக்கவிருந்த போதும், இறுதி நேரத்தில் மூவர் விமானத்தில் செல்லவில்லை. விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.