சில்லிவாக்கில் கொவிட்-19 தொற்று அடையாளங் காணப்பட்ட பாடசாலை மூடல்!

கேஸ்கேட் கிறிஸ்டியன் பாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து எச்சரிக்கையுடன் பாடசாலை நிர்வாகம், பாடசாலையை மூடியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை பாடசாலை அதன் கதவுகளை மூட முடிவு செய்துள்ளது.
சுய கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்தப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் மற்றும் அவர்கள் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்பதை தீர்மானிக்க தொடர்புத் தடமறிதல் தொடங்கப்படுகிறது.
பாடசாலை சமூகத்துடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கு பொதுச் சுகாதார ஊழியர்கள் தொற்று மற்றும் தொடர்பு மேலாண்மை செயல்முறை முழுவதும் பாடசாலையுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.