சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கிய கனடா
In அமொிக்கா November 29, 2020 4:48 am GMT 0 Comments 2576 by : Jeyachandran Vithushan

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டமையின் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மருந்து ஏற்றுமதியை கனடா மொத்தமாக நிறுத்தியுள்ளது.
அமெரிக்கர்களுக்கு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துக்கான விலைகளைக் குறைக்க அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கனேடிய சந்தைக்குள் இருக்கும் சில மருந்துகள் கனடாவுக்கு வெளியே நுகர்வுக்காக விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன, அந்த விற்பனை, மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும் என கனேடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுடனான தனது முதல் விவாதத்தில் ட்ரம்ப் இந்த திட்டத்தை குறிப்பிட்டார்.
இருப்பினும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் மாதம் மற்ற நாடுகளுக்கு மருந்து பொருட்கள் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார், மேலும் கனேடியர்களின் தேவைகளைப் பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.