நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த தினம் இன்று!
In சினிமா February 17, 2021 10:37 am GMT 0 Comments 1091 by : Krushnamoorthy Dushanthini

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருடைய நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மற்றும் கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.