சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று (வியாழக்கிழமை) பூசையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தில், நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதுடன் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அத்துடன், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
‘டான்’ திரைப்படத்தின் கதை, கல்லூரிப் பின்னணியில் அமைந்துள்ளதால், படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.