சி.பி.ஐ. மூலம் மத்திய அரசிற்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு
In இந்தியா October 24, 2018 5:05 pm GMT 0 Comments 1446 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சி.பி.ஐ. மூலம் தி.மு.க. எவ்வற்றையாவது செய்ய வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய சி.பி.ஐ.யின் நிலைமை இப்படி மாறிக்கொண்டிருக்கிறது. முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் என்ன சொன்னார்கள், சி.பி.ஐ. என்பது Congress Bureau of Investigation என்றார்கள். இப்போது Centre for Bjp Investication என்று ஆகிவிட்டது.
சி.பி.ஐ. எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது எங்கள் அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு போட்டு முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் இராஜினாமா செய்யவேண்டும், டி.ஜி.பி. ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்வது நடக்கிறது.
சிபிஐயின் அவல நிலையை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார்
சி.பி.ஐயை வைத்துக்கொண்டு அதிமுகவை அன்றைய காங்கிரஸ் அரசும் பழிவாங்கியது, தற்போது திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏதாவது செய்யவேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.
சி.பி.ஐ. மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, அதன் இயக்குநர்களே மாற்றப்பட்டு வருவதால், சிபிஐ அமைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என தேசியக் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த 10 இலட்சம் பேர் தமிழகத்தில் வேலை செய்கின்றனர்.” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.