சீனாவின் அத்துமீறலை இந்தியா சிறப்பாகக் கையாள்கிறது – அமெரிக்கா
In இந்தியா January 14, 2021 10:12 am GMT 0 Comments 1351 by : Krushnamoorthy Dushanthini

சீனாவின் எல்லை அத்துமீறலை இந்தியா தனது வலிமையைக் கொண்டு திறமையாகக் கையாள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து இரகசிய அறிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் வெள்ளை மாளிகை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “பாதுகாப்புப் பிரச்சினைகளில் இணைந்து செயற்பட அமெரிக்காவிற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கடற்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா துடிக்கிறது.
இந்தியா தனது வலிமையைக் கொண்டு அதனை சிறப்பாகத் தடுக்கிறது. தெற்காசியப் பிராந்தியம் இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இணைந்து செயற்படும்பட்சத்தில் சீனாவுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுக்க முடியும்.
அணுசக்தி உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுடன் எரிசக்தித் தொழில்நுட்பம் விண்வெளி மற்றும் கடல்சார் பாதுகாப்புப் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என ரொபேர்ட் ஓ பிரையன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.