சீனாவிலிருந்து வந்த பிரித்தானியர்கள் அரோவ் பார்க் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
In இங்கிலாந்து January 31, 2020 5:39 pm GMT 0 Comments 3316 by : S.K.Guna

சீனாவின் வுஹான் நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் 83 பிரித்தானியர்களும் 27 ஐரோப்பிய பிரஜைகளும் அழைத்து வரப்பட்டனர்.
ஜம்போ ஜெட் விமானத்தில் வந்திறங்கிய பிரித்தானியப் பிரஜைகள் அனைவரும் மேர்ஸிசைட், வீர்ரலில் உள்ள அரோவ் பார்க் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைப் பணியாளர்களுக்கான தங்குமிடத்தில் அவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டிருந்தது.
ஒக்ஸ்பேர்ட்ஷையரில் உள்ள ரோயல் விமானப்படைத் தளமான பிரிஸ் நோற்ரனில் (Brize Norton) இல் தரையிறங்கிய பயணிகளை பிரத்தியேகமான இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பயிற்சியாளர்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் பிரிவினர் இன்று அதிகாலையிலேயே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
விமானத்தில் பயணித்த 27 ஐரோப்பிய பிரஜைகளையும் அந்தந்த நாடுகள் பொறுப்பேற்பதற்காக அவர்கள் ஸ்பெயினுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தத்தக்கது.
நன்றி gloucestershirelive.co.uk – itv.com/news – dailymail.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.