சீனாவில் குழந்தைகள் மீது தாக்குதல் 20 பேர் காயம் – சந்தேக நபர் கைது
சீனாவிலுள்ள பாலர் பாடசாலையில் மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 20 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
சீன தலைநகர் பீஜிங்கிலுள்ள பாலர் பாடசாலையில் இன்று(செவ்வாய்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட சில முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக சீனாவில் சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கவலை வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.