சீனாவுக்கு எதிராக பலத்தை அதிகரிக்கும் இந்தியா- ஆகாஸ் ஏவுகணைகளைப் பரிசோதித்தது!

சீனாவுடன் லடாக் எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில், விமானங்களைத் தாக்கியழிக்க கூடிய 10 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப் படை சோதனை செய்துள்ளது.
ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏவுகணைகள் இலக்கை துல்லியமாகத் தாக்கியழித்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீன விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த ஏவுகணைகள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ளன.
ஆகாஷ் ஏவுகணையை மேலும் அதிக செங்குத்தான உயரத்திலுள்ள இலக்கைத் தாக்கும் விதத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேம்படுத்தி வருகின்றது.
இதேவேளை, படை வீரர்கள் தோளில் வைத்து ஏவக்கூடிய இக்லா ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.