சீனா – இலங்கைக்கு இடையிலான விமான சேவைகள் இரத்து!
In இலங்கை April 26, 2019 9:00 am GMT 0 Comments 2786 by : Krushnamoorthy Dushanthini

கொழும்பு மற்றும் ஷங்காய்க்கு இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான சேவைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து இரத்து செய்யப்படவுள்ளதுடன், கொழும்பு மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான விமான சேவை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை சீனா,சதர்ன் மற்றும் எயார் விமான சேவைகளும் கொழும்பிற்கான தமது விமான பயணங்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானித்து வருவதாக குறித்த விமான சேவைகளின் உள்ளுர் முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் நாட்டின் பாதுகாப்பு சூழலை கருத்திற்கொண்டு 39 நாடுகளுக்கான விசா நிவாரணம் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.