சீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நேற்று(வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயத்தின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீன தலைவர் ஒருவர் வடகொரியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக இருநாட்டு தலைவர்களும் சீனாவில் நான்கு முறை சந்தித்துள்ளனர்.
கிம் மற்றும் ஜின்பிங் இடையேயான இன்றைய சந்திப்பில் நிறுத்திவைக்கப்பட்ட வடகொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வடகொரியாவின் பிரதான வர்த்தக கூட்டாளியான சீனா, வடகொரியாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக கருதப்படுகிறது.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஜி20 மாநாட்டில் சீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் ஊடாக வடகொரியாவின் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வடகொரியாவின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க பங்குதாரராக இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு சீனா விரும்புகிறது.
சீன ஜனாதிபதியுடனான வடகொரிய தலைவரின் இந்த சந்திப்பு சீனாவுடன் வடகொரியாவுக்கு நல்லதொரு உறவு உள்ளதாக உலகுக்கு காட்டுவதற்கு உதவுமென நம்பப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஆணுவாயுத போர், அமெரிக்கா – சீனா வர்த்தக போர் இவற்றிற்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் வட கொரிய அரசத்தலைவருக்கும் இiடையில் வியட்நாமில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பாத நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.