News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கில் எதற்காக அனைத்துலக விமான நிலையம் – ரோஹித கேள்வி
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  • கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
  1. முகப்பு
  2. வணிகம்
  3. சீன வியாபார மற்றும் முதலீட்டு மாநாடு

சீன வியாபார மற்றும் முதலீட்டு மாநாடு

In வணிகம்     January 16, 2019 11:32 am GMT     0 Comments     1799     by : Varshini

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் சீனாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமான ZTE Internet Culture Media (Beijing) Co. Ltd. தனது முதலாவது ‘Civilized China’ வியாபார மற்றும் முதலீட்டு மாநாட்டை கொழும்பில் அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.

தென்கிழக்காசிய பிராந்தியத்தில் ZTE முன்னெடுக்க திட்டமிட்டுள்ள பல மாநாடுகளில் முதலாவது மாநாடு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் பங்கேற்பதற்கு 300க்கும் அதிகமான வியாபார தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

ZTE பேச்சாளரான Wu Gao Ning Shen கருத்துத் தெரிவிக்கையில், ”சீன நாகரீகம் தொடர்பில் உலக மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் வியாபார மற்றும் பொருளாதார கூட்டிணைவுக்கு காணப்படும் வாய்ப்புகளை வலிமைப்படுத்துவது இந்த வியாபார மற்றும் முதலீட்டு மாநாட்டின் நோக்கமாக அமைந்துள்ளது. கலாசார பரிமாற்றங்களை ஊக்குவிக்க நாம் எதிர்பார்ப்பதுடன், ஆழமான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான நாகரீக தொடர்புகளுக்கிடையில் மதிப்பை ஏற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

”ZTEஐச் சேர்ந்த நாம் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள இந்த மாநாட்டின் முதலாவது அமர்வை இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தூதுக்குழுவினரிடமிருந்து எமக்கு உறுதியான வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் பரஸ்பர அனுகூலமளிக்கும் வியாபாரங்கள் உருவாகும் என நாம் எதிர்பார்க்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு சீன சம்மேளனம், சீன சுற்றுலா சபை மற்றும் சீன கலாசார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை சுற்றுலா மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

குறிப்பாக, உள்நாட்டில் புகழ்பெற்ற ஆயுர்வேத சொகுசு வர்த்தக நாமமான ஸ்பா சிலோன், இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தது. சீனாவின் ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு அஞ்சல் செய்திருந்த நிலையில், அவர்களுக்கு பெருமளவு சர்வதேச பிரசாரமும் கிடைத்திருந்தது.

“ZTE  கோர்பரேஷன் என்பது தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சர்வதேச முன்னோடியாக திகழ்கிறது. 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், ஹொங்கொங் மற்றும் ஷென்ஸென் பங்கு பரிவர்த்தனைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். ஒன்றிணைக்கப்பட்ட புத்தாக்கங்களை வழங்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு, பெறுமதி ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. உலகளாவிய ரீதியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் இணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப புத்தாக்கத்தில் ZTE  நம்பிக்கை கொண்டுள்ளதுடன், வருடாந்த வருமானத்தில் 10மூக்கும் அதிகமான தொகையை ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் முதலீடு செய்கிறது. அமெரிக்கா, சுவீடன், சீனா ஆகிய நாடுகளில் நவீன வசதிகள் படைத்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையங்களை நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தில் 30000க்கும் அதிகமான ஆய்வு நிபுணர்கள் பணியாற்றுவதுடன், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான 5G, the Internet of Things, NFV, SDN, Cloud Computing மற்றும் போன்றன தொடர்பில் பணியாற்றி வருகின்றனர். ZTE தனது விண்ணப்பங்களை 72000க்கும் அதிகமான காப்புரிமைகளுக்கு பதிவுசெய்துள்ளதுடன், இதில் 33000க்கான அனுமதியையும் பெற்றுள்ளது. 2010 முதல், உலகின் சிறந்த 3 காப்புரிமை விண்ணப்பதாரிகளில் ஒன்றாக Patent Cooperation Treaty (PCT)இன் கீழ் தரப்படுத்தப்பட்ட வண்ணமுள்ளதாக World Intellectual Property Organization தெரிவித்துள்ளது.

UN Global Compactஇன் அங்கத்தவர் எனும் வகையில் ZTE சமநிலையான, சமூக, சூழல் மற்றும் பொருளாதார மட்டங்களில் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் தன்னை அர்ப்பணித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தொடர்பாடல் சுதந்திரத்தை ஊக்குவிப்பதுடன், புத்தாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஆயுட்காலத்தில் ‘going green’ எனும் மூலோயாபத்தை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வந்துள்ளது. இவற்றில் R&D, உற்பத்தி, சரக்கு கையாள்கை மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றன அடங்கியுள்ளன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அமெரிக்க- சீன வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு?- உயர்மட்ட சந்திப்பு ஆரம்பம்  

    அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை குறித்;;த புதிய சுற்று பேச்

  • இலங்கையுடனான இருதரப்பு உறவுககளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்!  

    இலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்கவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகி

  • இலங்கையின் மற்றுமொரு முக்கிய திட்டத்தில் சீனா!  

    இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் சீனாவிடம், கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப

  • அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: சிறந்த தீர்வை பெற சீனா எதிர்பார்ப்பு  

    அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் மூலம் சிறந்த தீர்வொன்றை பெறுவதற்கு சீனா எதிர்பார்த்துள்ள

  • சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கை  

    சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங


#Tags

  • Civilized China
  • ZTE
  • சீனா
  • முதலீட்டு மாநாடு
    பிந்திய செய்திகள்
  • மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
    மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
    ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
    இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
    கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  • கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
    கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
    வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
  • கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
    பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
  • திருமண ஊர்வலத்தில் விபத்து – 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
    திருமண ஊர்வலத்தில் விபத்து – 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.