சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை சாதிக்கும் – ஹத்துருசிங்க நம்பிக்கை
In கிாிக்கட் March 6, 2018 6:29 am GMT 0 Comments 1402 by : Velauthapillai Kapilan

சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சாதிக்கும் என இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க கருத்து வெளியிடுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தொடரில் சிறப்பாக செயற்படுவதற்கு இலங்கை அணி தயார் நிலையில் இருப்பதாகவும் இனிவரக்கூடிய போட்டிகளில் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த கிரிக்கட் தொடர்கள் இலங்கை அணிக்கு சிறந்த கிரிக்கட் தொடர்களாகவே காணப்பட்டன, பயிற்சி நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்கின்றன. அத்துடன் அணியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை
எனவே இன்று நடக்கவிருக்கும் தொடரில் இலங்கை அணி சிறப்பாக விளையாடுவதற்கு தயாரான நிலையில் இருக்கிறது என்று ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.