சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு
In இலங்கை January 28, 2021 8:49 am GMT 0 Comments 1479 by : Yuganthini
சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இன்று (வியாழக்கிழமை) அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறும் மாபெரும் நீதிப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.