சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை – கொழும்பில் விசேட போக்குவரத்து நடைமுறை!
In இலங்கை January 28, 2021 7:39 am GMT 0 Comments 1343 by : Jeyachandran Vithushan

73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வு காரணமாக கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 30 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
குறித்த நாட்களில் காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர மாவத்தை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் நாளன்று காலை 4 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரையும் குறித்த பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள் நிலையில் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து நடைபெறும் இரண்டாவது சுதந்திரதின நிகழ்வு இது என்பதுடன் குறித்த நிகழ்வை செழிப்பான எதிர்காலம் வளமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.