சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம் யாழில் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு அனுஷ்டிப்பு
In இலங்கை December 26, 2020 6:11 am GMT 0 Comments 1415 by : Yuganthini
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக, நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
குறித்த தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான அங்கஜன் ராமநாதன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரீ.எ.சூரியராஜா, மதத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.