சுமத்ரா தீவில் இயற்கை அனர்த்தம் – 12 ஆயிரம் பேர் இடம்பெயர்வு 10 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக, சுமத்ரா தீவின் பெங்குலு மாநிலத்திலுள்ள ஒன்பது நகரங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில இடங்களில் வெள்ள நீர் வடிந்தோடியுள்ள நிலையிலும், அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை மதிப்பிட முடியாதுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு, புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.