சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர
In ஆசிரியர் தெரிவு February 9, 2021 6:30 am GMT 0 Comments 1935 by : Jeyachandran Vithushan

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு தனது உத்தரவின் பேரில் நீக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விசேட அதிரடிப் படை பாதுகாப்பை பெற்றுக்கொண்ட சுமந்திரன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டதாக்க சரத் வீரசேகர தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மையாகவே சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால், அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் சுமந்திரனுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.