சுய தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்கும் பிரித்தானியா!
In இங்கிலாந்து December 12, 2020 8:08 am GMT 0 Comments 1655 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பயணக்கட்டுப்பாட்டில் முக்கிய தளர்வினை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி முன்னதாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந் நிலையில், தற்போது வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14இல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வர உள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான சுய தனிமை படுத்தல் காலமும் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.