சுற்றிவளைப்புகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன -காத்தான்குடி மக்கள்
In இலங்கை May 5, 2019 10:58 am GMT 0 Comments 2248 by : Dhackshala
காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சுற்றிவளைப்புகள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வீடுகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வினவியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் சோதனை நடவடிக்கைகள் அசௌகரியங்களை ஏற்படுத்தியபோதும் நாட்டில் நிலவும் அசாதாரன சூழ்நிலையில் இவாவாறான சோதனை நடவடிக்கைகள் அவசியமென்றே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு வீடுகளும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் நோன்பு பெருநாளுக்கு முதல் அனைத்து வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் அது தங்களது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துமென்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.