சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான விசா வழங்கும் விசேட திட்டம் நிறுத்தம்

நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் பிரஜைகளுக்கு விசா வழங்கும் விசேட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது. ஆனால், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியிட்டுள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் பிரஜைகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கான விசா வழங்கும் விசேட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்புக் காரணிகளை கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.