சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் சீனாவின் நீர்வீழ்ச்சி!
சீனாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான Huangguoshu தென்மேற்கு சீனாவின் குயிஷோ மாகாணத்தின் அன்ஷன் நகரில் அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சி ஒரு சுற்றுலாத் தளமாக அமைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
எதற்காக என்று கேட்டால் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை, நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மெருகூட்டியுள்ளது. அங்கு அதிகளவான நீரோட்டம் காணப்படுவதால் பார்ப்பதற்கு ஒரு ரம்மியமாக அழகை அந்த நீர்வீழ்ச்சி கொடுக்கிறது.
அதாவது கம்பீரமாகவும் கொந்தளிப்பாகவும் உள்ள நீர்வீழ்ச்சியை இயற்கை காட்சியுடன் சேர்த்து இரசிப்பதற்கே சுற்றுலாப் பயணிகள் படை எடுக்கின்றனர். அவர்கள் நீர் வீழ்ச்சியில் அதிகளவு நீர் கொட்டுவதால் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதைப் போன்ற காட்சி இயற்கையாகவே அமைந்துவிடுகிறது.
இது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவிக்கையில், ‘ நான் இங்கு முதல்தடவையாக வந்துள்ளேன். இந்த நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக உள்ளது. நீர்வீழ்ச்சியும் அதனை சுற்றியுள்ள இயற்கைக் காட்சியும் அற்புதமாக உள்ளது. இங்குள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.