சுஷாந் சிங்கை தொடர்ந்து தோனி திரைப்படத்தின் மற்றுமொரு பிரபலம் தற்கொலை!
In சினிமா February 16, 2021 4:32 am GMT 0 Comments 1080 by : Krushnamoorthy Dushanthini

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைபடத்தில் நடித்த சந்தீப் நாகர் என்ற நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரியானாவை சேர்ந்த அவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து உள்ளார். தோனி திரைப்படத்தில் நடிகர் சுஷாந் சிங்கின் நண்பராக நடித்துள்ளார்.
தனது வாழ்வில் அதிக துன்பங்களை சந்தித்து உள்ளதாகவும், தன் மனைவியுடன் நல்ல உறவு இல்லை என்றும் தனது முகப்புத்தகத்தில் 10 நிமிட காணொலியொன்றினையும் அவர் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மும்பை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.