சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 84 வயதான சஹ்தி இன்று (வியாழக்கிழமை) காலை உயிரிழந்தார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்த சஹ்தி, 1989ஆம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்ட இராணுவ ஆட்சியால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்..
உம்மா கட்சி அல்-பஷீரின் கீழ் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகும். அல்-மஹ்தி அவர் கவிழ்க்கப்பட்ட பின்னரும் ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.
ஒரு அறிக்கையில், அல்-மஹ்தி சூடானில் உள்ள ஓம்துர்மன் நகரில் வெள்ளிக்கிழமை காலை அடக்கம் செய்யப்படுவார் என்று உம்மா கட்சி தெரிவித்துள்ளது.
“அவரது மரணம் குறித்து சூடான் மக்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கட்சி தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ சூடான் செய்தி நிறுவனம் அல்-மஹ்தி “சூடான் அரசியல் மற்றும் பொது வாழ்வில் தொடர்ச்சியாக 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனித்துவமான நபராக இருந்தார், நிகழ்வுகளை வடிவமைத்து நாட்டின் போக்கிற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களித்தார்” என கூறியுள்ளது. சூடானில் ஜனநாயகம் மீதான அவரது உறுதிப்பாட்டையும் பாராட்டியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.