சூடுபிடித்துள்ள தேர்தல் களம் – ஒரே நாளில் பிரசாரத்தை முன்னெடுக்கும் பிரதான கட்சிகள்!
In இந்தியா April 26, 2019 4:59 am GMT 0 Comments 2302 by : Krushnamoorthy Dushanthini

மஹராஷ்டிராவில் இறுதி தேர்தல் நடைப்பெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதான கட்சிகள் இரண்டும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளன.
இதன்படி பா.ஜ.க சார்பாக பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
மும்பையில் உள்ள ஆறு தொகுதிகளில் பா.ஜ.க – சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பையிலுள்ள பாந்திரா குர்லா Complex மைதானாத்திற்கு வருகைத்தரவுள்ளார்.
இதேவேளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஷீரடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கம்நேர் பகுதியில் நடக்கும் பிரசார கூடத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.