சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் – 12 மணி நிலைவரம்! UPDATE
In இந்தியா April 29, 2019 5:33 am GMT 0 Comments 2585 by : Krushnamoorthy Dushanthini

இந்திய நாடாளுமன்ற தேர்தல் காலை ஏழு மணிக்கு தொடங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகின்றது.
இந்நிலையில் தற்போதைய நிலைவரப்படி பீகாரில் 18.26, ஜம்மு – காஷ்மீரில் 3.74, மத்திய பிரதேசத்தில் 27.09, மகாராஷ்டிரத்தில் 17.21, ஒடிசாவில் 19.67 ராஜஸ்தானில் 29.34, உத்தரபிரதேசத்தில் 21.18, மேற்கு வங்காளத்தில் 35.10, ஜார்கண்டில் 29.21 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் – தற்போதைய நிலைவரம்!
இந்திய நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) நான்காம் கட்ட தேர்தல் இடம்பெற்றுவருகின்றது.
இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை 9 மணி நிலைவரப்படி மகராஷ்டிர மாநிலத்தின் 17 தொகுதிகளிலும் 6.82 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதுடன் இங்கு 11.11 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை ஒடிசாவில் 9 வீதமும், மேற்கு வங்கத்தில் 16.90 வீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.