சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – திரையுலக பிரபலங்கள் வாக்களிப்பு!
In இந்தியா April 29, 2019 7:37 am GMT 0 Comments 2481 by : Krushnamoorthy Dushanthini

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்ற 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில் பொலிவுட் நடிகையான கங்கணா ரானாவட் மும்பையில் வாக்களித்துள்ளதுடன்,நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண்ராவ் ஆகியோர் பாந்த்ராவில் உள்ள பாடசாலையொன்றில் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை நடிகர் அனுபம் கெர், மாதுரி தீஷித், பிரியங்கா சோப்ரா, சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பல பிரபலங்களும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.