சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு
In சினிமா April 26, 2019 7:41 am GMT 0 Comments 2203 by : adminsrilanka

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள’ என்.ஜி.கே’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் அடுத்த மாதம் 31ஆம் திகதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ஒரு சிறு இடைவெளிக்கு பின் செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜா இணையும் இத்திரைப்படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்ததுள்ளனர்.
இத்திரைப்படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.